CRIME
“ஐயோ காப்பாற்றுங்கள்…” குடும்பத்தினர் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த 27 வயது இளைஞர்… மர்ம கும்பலின் வெறிச்செயல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில், வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பிய ஒரு வாரத்திலேயே, குடும்பத்தினர் கண்முன்னாலேயே 27 வயது இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த ஷமீம் என்ற இளைஞரே இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ஷமீம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய முன்விரோதம் காரணமாக இந்தப் படுகொலை அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று கோட்டவிளை பகுதியில் ஷமீம் தனது குடும்பத்தினருடன் இருந்தபோது, அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைச் சுற்றி வளைத்துள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஷமீம் ஓடியபோதிலும், குடும்பத்தினர் கதறித் துடிக்க அவர்களது கண்முன்னாலேயே அந்தக் கும்பல் ஷமீமை ஓட ஓட விரட்டிக் கத்திகளால் சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் செயலை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய மூன்று குற்றவாளிகளையும் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் முகேஷ் மற்றும் அவருடன் வந்த மற்ற இருவர் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருக்கு வந்த சில நாட்களிலேயே குடும்பத்தினர் முன்னிலையில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
