அடப்பாவிகளா.. பெல்ட் பக்கிளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான ஆயுதம்.. விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சிச் சோதனை.. CISF வெளியிட்ட வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவிகளா.. பெல்ட் பக்கிளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான ஆயுதம்.. விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சிச் சோதனை.. CISF வெளியிட்ட வைரல் வீடியோ..!!

Published

on

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணியின் பெல்ட் பக்கிளுக்குள் நூதன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைஅதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கிலிருந்து டெல்லி வந்தடைந்த அந்தப் பயணி, அங்கிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்குச் செல்லும் இணைப்பு விமானத்தில் ஏறுவதற்குத் தயாராக இருந்தார். அப்போது அவரது உடமைகளை எக்ஸ்-ரே ஸ்கேனர் மூலம் பரிசோதித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், பயணப் பையில் அசாதாரணமான உலோகப் பொருள் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக அந்தப் பையை நேரடிச் சோதனைக்கு உட்படுத்தினார்.

நேரடிப் பரிசோதனையின் போது, கருப்பு நிற உலோக பெல்ட் பக்கிளுக்குள் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மிகத் துல்லியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கூர்மையான சிறிய கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பயணி விமானத்தில் ஏறுவதைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், பெல்ட் பக்கிளைத் திறந்ததும் உள்ளே இருந்து கத்தி வெளிவரும் காட்சிகள் அடங்கிய வீடியோவை CISF தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்டுள்ளது; இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

விமானத்தின் பயணிகள் அறைக்குள் கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்வது பயணிகளுக்கும் விமானப் பணியாளர்களுக்கும் பெரும் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் அவற்றுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற இந்தப் பொருளைத் தனது அபாரமான விழிப்புணர்வால் கண்டறிந்து, பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்த CISF பரிசோதகருக்குப் பாதுகாப்புப் படைத் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் விமான நிலையப் பாதுகாப்புச் சோதனைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in