“6 மாதத்தில் ரூ. 2 கோடி மாமூல் வசூல்?” பெண் எஸ்.ஐ. தற்கொ** முயற்சி விவகாரத்தில் ஆய்வாளர் சுதாகர் அதிரடி சஸ்பெண்ட்…!! – cinefeeds
Connect with us

CRIME

“6 மாதத்தில் ரூ. 2 கோடி மாமூல் வசூல்?” பெண் எஸ்.ஐ. தற்கொ** முயற்சி விவகாரத்தில் ஆய்வாளர் சுதாகர் அதிரடி சஸ்பெண்ட்…!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய சுதாகர் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் அவர் சுமார் ரூ. 2 கோடி வரை வசூலித்ததாகவும், கோவில் திருவிழாக்கள், மாட்டுவண்டிப் பந்தயம் மற்றும் புகார்களுக்கு வரும் பொதுமக்களிடம் அடாவடியாகப் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் பொதுமக்களை ஒருமையில் பேசுதல், டீக்கடை உரிமையாளரை மிரட்டுதல், லாட்ஜ் வாடகை தராமல் இருத்தல், மதுபோதையில் நடந்து கொள்ளுதல் மற்றும் பெண் உதவி ஆய்வாளருக்குப் பாலியல் தொல்லை அளித்ததால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த சுயம்பு என்பவர் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. ஊர்க் கோவில் கொடை விழாவிற்கு அனுமதி வழங்க ஆய்வாளர் சுதாகர் ரூ. 7,000 பெற்றுக்கொண்ட நிலையில், மீதமுள்ள ரூ.18,000 தொகையைக் கேட்டு இரு காவலர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தப் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆய்வாளர் சுதாகரைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in