LATEST NEWS
BREAKING: “அந்தோ பரிதாபம்” மிகுந்த வலியோடு சொல்கிறோம்… திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றம் வேதனை..!!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, தற்போதைய சூழ்நிலையைக் கண்டு உச்ச நீதிமன்றம் மிகுந்த வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. நிலைமையைப் பார்க்கும்போது ‘அந்தோ பரிதாபம்’ என்ற வார்த்தையே முதலில் நினைவுக்கு வருவதாக நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கருத்தைத் தாங்கள் மிகுந்த வலியோடும் வேதனையோடும் பதிவு செய்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், ஒரு ஜனநாயக நாட்டில் எல்லாவற்றையும் விடச் சட்டத்தின் ஆட்சியே மிக உயர்ந்தது என்பதைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்திய மக்களுக்கு நீதி, சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதையே நமது அரசியலமைப்பின் முகப்புரை பிரதிபலிக்கிறது என்றும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது கருத்தில் ஆழமாக வலியுறுத்தியுள்ளது.
