LATEST NEWS
என்ன திமிர்..! “ரொம்ப நாளைக்கு நீடிக்க மாட்டீங்க..” – முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை..!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளதில், உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதல்வர் விஜய் ஏற்க மறுப்பதாகவும், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தற்போதைய அரசு இந்து மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதல்வர் விஜய் இந்துக்களின் எதிரியா என்றும், இது இந்து விரோத அரசா என்றும் மக்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு அவர்களின் மனநிலை புண்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேலும், அரசின் இந்தப் போக்கை ஆணவம் மற்றும் திமிர் என்று சாடியுள்ள நயினார் நாகேந்திரன், இதற்கு உச்சநீதிமன்றம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட இந்த நாளில் சட்டமன்றத்தில் இந்த அரசு அதிக நாட்கள் நீடிக்காது என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
