“அம்மா…” நடுரோட்டில் கதறித் துடித்த மகள்.. கண்முன்னே துடிதுடித்து உயிரைப் பறிகொடுத்த தாய்.. சென்னையை உலுக்கிய கோர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா…” நடுரோட்டில் கதறித் துடித்த மகள்.. கண்முன்னே துடிதுடித்து உயிரைப் பறிகொடுத்த தாய்.. சென்னையை உலுக்கிய கோர சம்பவம்..!!

Published

on

சென்னையில் தனது மகளுடன் ஸ்கூட்டியில் சென்ற தாய் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த உமா (52) என்பவர், தனது மகள் கிருத்திகாவுடன் துணிக்கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் பயணித்த ஸ்கூட்டி மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த உமா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisement

மகள் கண்முன்னே தாய் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மகள் கிருத்திகாவிற்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in