“முதலில் அவளைக் கொன்றுவிட்டு நானும்..” ஹோட்டல் அறையில் சிக்கிய காதலனின் பகீர் கடிதம்.. 6 ஆண்டு ரகசிய காதலின் கொடூர முடிவு.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“முதலில் அவளைக் கொன்றுவிட்டு நானும்..” ஹோட்டல் அறையில் சிக்கிய காதலனின் பகீர் கடிதம்.. 6 ஆண்டு ரகசிய காதலின் கொடூர முடிவு.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில், பெற்றோர் தங்கள் சொந்த மகனைப் போல நம்பி ஆதரவளித்த பக்கத்து வீட்டு இளைஞனே, அவர்களின் 19 வயது மகளை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குரைஷிபூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பு சிங்கின் மகள் அருணா (19), டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 24 வயதான விபின் யாதவ், கொரோனா பெருந்தொற்றின் போது தனது பெற்றோரை இழந்தார். அதன்பிறகு, தந்தை சேர்த்து வைத்திருந்த 12 லாரிகள், நிலங்கள் மற்றும் காரை விற்று, வீட்டையும் அடமானம் வைத்துப் பெரும் கடனில் மூழ்கிய விபினுக்கு, அருணாவின் தந்தை சம்பு சிங் ஒரு தந்தையைப் போலப் பக்கபலமாக இருந்து ஆதரவளித்தார்.

சம்பு சிங்கின் வீட்டிற்குத் தினமும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போலச் சென்று வந்த விபினுக்கும், அருணாவுக்கும் இடையே நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. சுமார் ஆறு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த விஷயம் அக்கம்பக்கத்தினருக்குத் தெரிந்திருந்தாலும், விபினைத் தங்கள் மகனைப் போலவும் அருணாவின் சகோதரனைப் போலவும் கண்மூடித்தனமாக நம்பிய பெற்றோருக்குத் தெரியாமலேயே போனது. இந்நிலையில், அருணாவிற்கு அவரது தந்தை திருமணத்திற்கு வரன் பார்க்கத் தொடங்கியதால், தங்கள் காதலைக் குடும்பத்தினரும் இந்த உலகமும் ஏற்றுக்கொள்ளாது என்று நினைத்த இருவரும் விபரீத முடிவெடுக்கத் துணிந்தனர்.

Advertisement

நவம்பர் 23-ஆம் தேதி திங்கட்கிழமை காலை, வழக்கம் போலக் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பிய அருணா, மெட்ரோ ரயில் நிலையத்தில் விபினைச் சந்தித்து அவருடன் ஃபரிதாபாத் செக்டார் 37-ல் உள்ள ‘சோயா கிராண்ட்’ ஹோட்டலுக்குச் சென்றார். காலை 11 மணியளவில் அறை எண் 204-ஐ முன்பதிவு செய்த இருவரும், மதியம் 3 மணி வரை இயல்பாக இருந்துள்ளனர்; அப்போது அருணா தனது பெற்றோரிடமும் போனில் பேசியுள்ளார். ஆனால், அதன்பிறகு அருணாவின் செல்போன் அணைக்கப்பட்டதோடு, மாலை வரை அவர் வீடு திரும்பாததால் பதறிப்போன குடும்பத்தினர் காவல் நிலையத்தில் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர்.

மறுநாள் ஹோட்டல் அறையைக் காலி செய்யும் நேரம் வந்தும் கதவு திறக்கப்படாததாலும், விபினின் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்ததாலும் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கே படுக்கையில் அருணா சடலமாகக் கிடந்ததும், அருகிலேயே எலி மருந்து பாட்டில் இருந்ததும் தெரியவந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், அந்த அறையிலிருந்து விபின் எழுதிய கடிதம் ஒன்றைக் கைப்பற்றினர்; அதில், “நாங்கள் ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம், இந்த உலகத்தால் நாங்கள் வெறுப்படைந்துவிட்டோம்; முதலில் அருணாவைக் கொன்றுவிட்டு, நானும் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பெற்றோர் வைத்த நம்பிக்கையையும், ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் சிதைத்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in