CRIME
“காதலுக்கு எதிர்ப்பு” கம்பியால் அடித்து மகனைத் தீர்த்துக்கட்டிய தாய்.. சிசிடிவியில் சிக்கிய கொடூர காட்சி.. பின்னணியில் அதிர்ச்சி ட்விஸ்ட்!
கர்நாடக மாநிலம் துமகூரு தாலுகா ஜக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த புட்டையா – சிவம்மா தம்பதியின் மகன் முத்துராஜ் (21), பெங்களூரில் பணிபுரிந்து வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். சம்பவத்தன்று இரவு உணவுக்குப் பிறகு வீட்டின் வெளியே பாயில் உறங்கச் சென்ற முத்துராஜ், மறுநாள் காலை தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், முத்துராஜ் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளுடன் உள்ள திருமணமான ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததும், குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி அவரைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. தாயார் சிவம்மா எச்சரித்தும் முத்துராஜ் கேட்காததால் ஆத்திரமடைந்த அவர், உறங்கிக் கொண்டிருந்த மகனை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகப் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் உண்மையைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, மகனைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தாயார் சிவம்மாவை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
