“அடச்சீ நீயெல்லாம் பெத்த தாயா..?” இரவு கோபி மஞ்சூரியன் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாகத் தூங்கிய மகன்.. காலையில் ரத்த வெள்ளத்தில் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய தாயின் அதிர்ச்சி முகம்.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் பெத்த தாயா..?” இரவு கோபி மஞ்சூரியன் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியாகத் தூங்கிய மகன்.. காலையில் ரத்த வெள்ளத்தில் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய தாயின் அதிர்ச்சி முகம்.. பகீர் பின்னணி..!!

Published

on

கர்நாடக மாநிலம் துமகூரு தாலுகாவில் உள்ள ஜக்கெனஹள்ளி கிராமத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாmjuu 66டித்த மகனைத் தாயே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தாயான சிவம்மாவைத் துமகூரு ஊரகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்த முத்துராஜ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூருவில் வேலை பார்த்து வந்த நிலையில், சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தனது சொந்த ஊரான ஜக்கெனஹள்ளிக்குத் திரும்பியுள்ளார்.

சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் மாலை, வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்ததோடு, குடும்பத்தினருக்குப் பிரசாதமும் வழங்கிய முத்துராஜ் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்துள்ளார். இரவு உணவிற்குப் பிறகு வீட்டிற்கு வெளியே பாயில் படுத்துத் தூங்கிய அவரை, மறுநாள் காலை அவரது சகோதரி நரசம்மா போர்வையால் மூடிய நிலையில் பார்த்துள்ளார். அருகில் சென்று பார்த்தபோது பாயில் ரத்தக் கறை படிந்திருப்பதையும், தலையில் பலத்த காயமடைந்து முத்துராஜ் உயிரிழந்திருப்பதையும் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த, திருமணமாகி இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு பெண்ணுடன் முத்துராஜுக்குப் பழக்கம் இருந்ததும், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அவரைத் திருமணம் செய்து கொள்ள முத்துராஜ் பிடிவாதமாக இருந்ததும் தெரியவந்தது. இதனால் கடும் ஆத்திரத்திலும் மன உளைச்சலிலும் இருந்த தாய் சிவம்மாவிற்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே, பக்கத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த முத்துராஜின் தலையில் தாய் சிவம்மா மரக்கட்டை அல்லது இரும்புக் கம்பியால் தாக்கும் அதிர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த முக்கிய ஆதாரத்தைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவம்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து துமகூரு ஊரகக் காவல்துறையினர் சிவம்மாவைக் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in