CRIME
“உடலில் ஒரு காயம் கூட இல்லை…” இயற்கை மரணம் என நம்பிய குடும்பம்… பிரேதப் பரிசோதனையில் வெளியான பகீர் உண்மை.. 19 வயது இளம்பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில், 19 வயதான சப்னா என்ற இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லாததால், இது ஒரு இயற்கை மரணமாக இருக்கலாம் என்றே அனைவரும் கருதினர். ஆனால், காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், அந்த அறிக்கையில் வெளியான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன.
பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, உயிரிழந்த சப்னா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இயற்கை மரணம் என நம்பப்பட்ட இந்தச் சம்பவம், திட்டமிட்ட கொலை என்பது உறுதியானதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
காதலின் பெயரால் அரங்கேற்றப்பட்டுள்ள இந்தக் கொடூரச் செயலுக்குப் பின்னணியில் இருப்பவர் சப்னாவின் காதலன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னை நம்பி வந்த 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை இவ்வளவு கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
