“ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி கட்டுங்க…” கடிதத்தைப் பார்த்துத் தலைசுற்றி விழுந்த ஏழை விவசாயி.. பின்னணியில் நடந்த பயங்கரம்..?! – cinefeeds
Connect with us

CRIME

“ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி கட்டுங்க…” கடிதத்தைப் பார்த்துத் தலைசுற்றி விழுந்த ஏழை விவசாயி.. பின்னணியில் நடந்த பயங்கரம்..?!

Published

on

பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமிக்கு, வணிகவரித்துறையிடம் இருந்து கடிதம் ஒன்று வந்துள்ளது. ஆங்கிலம் தெரியாததால் அந்தக் கடிதத்தை நண்பர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். அதில், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாகவும், அதனை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் கிராமத்தில் இரும்புக் கடை நடத்தி, பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்ததற்கான வரி பாக்கி இது எனக் கூறப்பட்டிருந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி கிருஷ்ணசாமி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Advertisement

தனது ஆதார் அட்டை மற்றும் வங்கி ஆவணங்களைத் திருடி, மர்ம நபர்கள் போலி நிறுவனம் தொடங்கி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இரண்டு மூன்று நாட்கள் கழித்துத் தங்களை வந்து சந்திக்குமாறு கூறியிருக்கிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in