“நள்ளிரவு 2 மணிக்கு வந்த மர்ம போன் கால்…” வீட்டை விட்டு வெளியே வந்த நொடி 4 பேர் கொண்ட கும்பல் செய்த வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிங்கரேணி ஊழியர்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவு 2 மணிக்கு வந்த மர்ம போன் கால்…” வீட்டை விட்டு வெளியே வந்த நொடி 4 பேர் கொண்ட கும்பல் செய்த வெறிச்செயல்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிங்கரேணி ஊழியர்.. பகீர் சிசிடிவி காட்சிகள்..!!!

Published

on

தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டம் கோதாவரிகானியில், சிங்கரேணி நிலக்கரி நிறுவன ஊழியர் ஒருவர் நள்ளிரவில் போன் மூலம் வீட்டிற்கு வெளியே வரவழைக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோதாவரிகானியில் உள்ள பவர்ஹவுஸ் காலனி பகுதியில் வசித்து வந்த 30 வயதான அட்லா ராஜசேகர் என்பவரே கொலை செய்யப்பட்டவர் ஆவார். இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், நான்கு இளைஞர்கள் கொண்ட கும்பல் ராஜசேகரின் செல்போனுக்கு அழைத்து அவரை வீட்டிற்கு வெளியே வருமாறு நைசாகப் பேசி வரவழைத்துள்ளது.

அவர்களது அழைப்பை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த ராஜசேகரைச் சுற்றி வளைத்த அந்த நான்கு இளைஞர்களும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால் அவரைச் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர். இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்; அவரைக் கொலை செய்ததும் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இந்தப் பதைபதைக்க வைக்கும் கொலைத் தாக்குதல் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

Advertisement

உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறை அதிகாரிகள், அதன் அடிப்படையில் தப்பியோடிய நான்கு குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு வலைவீசித் தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்தப் பயங்கரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in