“நீ ரொம்ப அழகா இருக்க.. உன் நம்பர் கொடு…” ICU-வில் உறங்கிக் கொண்டிருந்த மாணவி.. நள்ளிரவில் போர்வைக்குள் கைவிட்டு வார்டு பாய் செய்த அட்டூழியம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ ரொம்ப அழகா இருக்க.. உன் நம்பர் கொடு…” ICU-வில் உறங்கிக் கொண்டிருந்த மாணவி.. நள்ளிரவில் போர்வைக்குள் கைவிட்டு வார்டு பாய் செய்த அட்டூழியம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பர்கத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயது 10-ஆம் வகுப்பு மாணவியிடம், வார்டு பாய் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நவம்பர் 21-ஆம் தேதி அதிகாலை சுமார் 4:15 மணியளவில் மாணவி கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வார்டு பாய் ராஜா பன்சால் அவரிடம் சென்று கையைப் பிடித்துள்ளார்; கண் விழித்த மாணவியைப் போர்வையின் மேலேயே தவறாகத் தொட்டதுடன், செல்போனை நீட்டி “நீ நன்றாக இருக்கிறாய், எனக்கு உன்ன புடிச்சிருக்கு, பேச வேண்டும், உன் எண்ணைக் கொடு” என்று கேட்டுள்ளார். மாணவி மறுத்தும் அவர் மீண்டும் தவறாக நடந்து கொண்ட நிலையில், அப்போது அருகில் குடும்பத்தினர் யாரும் இல்லாததால், காலையில் அத்தை மகள் வந்ததும் மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளார்; இதைத் தொடர்ந்து உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்தச் சம்பவம் வார்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோர் மற்றும் சகோதரருடன் பஞ்ச்மடியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பரோடா அருகே கார் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகவும், அதனால் நவம்பர் 20-ஆம் தேதி சிகிச்சைக்காக பர்கத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

விவகாரம் பெரிதாகி உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, புகாரின் அடிப்படையில் வார்டு பாய் ராஜா பன்சால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் நிலைய அதிகாரி சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்ட வார்டு பாயை வேலையிலிருந்து நீக்கியுள்ளதுடன், காவல்துறையினர் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in