CRIME
“சார் நான் எங்க அண்ணியை கொ***டேன்..” போலீசில் சரணடைந்த கொழுந்தனின் பகீர் வாக்குமூலம்… குடும்ப தகராறில் நடந்த பகீர் சம்பவம்..!!
ராமநாதபுரம் உசிலங்குளம் பகுதியில் தனது அண்ணியை அடித்துக் கொலை செய்த கொழுந்தன் போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்முக சூர்யா என்பவருக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அப்பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சண்முக சூர்யாவின் கணவரும் தாயும் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, போலீசில் சரணடைந்த கொழுந்தனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
