CRIME
“கடைசியாக ஒரு இரவு மட்டும் வா” கணவர் இல்லாத நேரம் அழைத்த கள்ளக்காதலன்… மறுநாள் 2 குழந்தைகளின் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
தனு சர்மா என்ற பெண், தனது கணவரின் தாய்மாமன் மகன் மீது காதல் வயப்பட்டு, அவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். கணவர் இரவு நேரங்களில் விளக்கு அமைக்கும் (லைட்டிங்) வேலைக்காக வெளியே செல்லும் சமயங்களில், அந்த இளைஞரைத் தனது வீட்டிற்கு வரவழைத்து அவர் தனிமையில் நேரத்தைச் செலவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த இளைஞருடனான உறவை முறித்துக்கொள்ள தனு சர்மா முடிவு செய்துள்ளார். இதையடுத்து, கடைசியாக ஒரு இரவு மட்டும் தன்னைச் சந்திக்குமாறு அந்த இளைஞர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்குச் சம்மதித்த தனு சர்மா, அவருடன் அந்த இரவைக் கழித்துள்ளார்.
பின்னர், நள்ளிரவில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனு சர்மாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தால் தற்போது அவரது இரண்டு பெண் குழந்தைகளும் தாயை இழந்து தவித்து வருகின்றனர்.
