தோழியின் பச்ச துரோகம்.. மது குடிக்க வைத்துச் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. செல்போன்களை அணைத்துவிட்டுத் தப்பிய கும்பல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

தோழியின் பச்ச துரோகம்.. மது குடிக்க வைத்துச் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. செல்போன்களை அணைத்துவிட்டுத் தப்பிய கும்பல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் தானேயில், விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயதுச் சிறுமிக்குக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் காஷிகாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை, அவரது தோழியான சீத்தல் (25) என்பவர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துள்ளார். அதனை நம்பிச் சென்ற சிறுமியை, மிரா ரோடு வினய்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சீத்தல் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சீத்தலின் நண்பர்களான பியூஷ், துஷ்யந்த் மற்றும் ஆகாத் கான் ஆகியோர் இருந்துள்ளனர்.

விருந்து நிகழ்ச்சியின்போது, அங்கிருந்தவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு தோழி சீத்தலும், பியூஷும் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஆகாத் கான் மற்றும் துஷ்யந்த் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தச் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Advertisement

இதற்கிடையே, மகளைக் காணாமல் தவித்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மறுநாள் காலை வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் பெற்றோரிடம் கதறி அழுது கூறியுள்ளார். இதையடுத்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காஷிகாவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தோழி சீத்தல் உட்பட 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் தங்களது செல்போன்களை அணைத்து வைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in