ஐயோ..! வாயில் துணியை திணித்து, விரல்களை வெட்டி… வீட்டுக்குள் துண்டுதுண்டாக கிடந்த 3 வயது குழந்தையின் சடலம்.. பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த தாய்.. திடுக்கிடும் பிண்ணனி..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ..! வாயில் துணியை திணித்து, விரல்களை வெட்டி… வீட்டுக்குள் துண்டுதுண்டாக கிடந்த 3 வயது குழந்தையின் சடலம்.. பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த தாய்.. திடுக்கிடும் பிண்ணனி..!!

Published

on

வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த மான்யா என்ற 3 வயதுப் பெண் குழந்தை திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்த அவளது தந்தையும் குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தில் தீவிரமாகத் தேடிப் பார்த்தனர். ஆனால் குழந்தை குறித்து எந்தத் துப்பும் கிடைக்காததால், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் வீட்டிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் உள்ள ரோஹ்தாஷ் ராஜ்புத் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த சோனாலி என்ற பெண்ணின் அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். சந்தேகத்தின் பேரில் அந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே 3 வயதுக் குழந்தை மான்யா கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டுச் சடலமாகக் கிடந்ததைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

குழந்தையின் விரல்கள் வெட்டப்பட்டிருந்ததோடு, சத்தம் வராமல் இருக்க வாயில் துணி திணிக்கப்பட்டிருந்தது; மேலும் அந்த அறையில் மாந்திரீகச் சடங்குகள் செய்யப்பட்டதற்கான தடயங்களும் சிக்கியுள்ளன. சுமார் ஓராண்டாக அங்கு வாடகைக்கு வசித்து வந்த சோனாலிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், எது சரி எது தவறு என்று கூடத் தெரியாத அந்தப் பச்சிளம் குழந்தையை மூடநம்பிக்கையின் பெயரில் மாந்திரீக நரபலி கொடுத்துள்ள கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in