LATEST NEWS
“என் சாவுக்கு கணவன், மாமியார், கொழுந்தனாரே காரணம்”… 90% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் பெண் வெளியிட்ட பகீர் வீடியோ வாக்குமூலம்… திருப்பூரில் பரபரப்பு..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. இவருக்கும் இவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நிர்மலா, நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து 90 சதவீதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தனது இந்த விபரீத முடிவுக்குக் கணவன், மாமியார் மற்றும் கொழுந்தனார் ஆகியோரே காரணம் என நிர்மலா பேசிய வீடியோ வாக்குமூலம் ஒன்று தற்போது வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
