LATEST NEWS
“நான் தான் கிடைச்சானா BRO.. கிளம்பு கிளம்பு” “எவ்வளவு கால் பண்ணாலும் எடுக்க மாட்டேன் போ… ட்ரம்பை கண்டுகொள்ளாமல் சுற்றலில் விட்ட கிம் ஜாங் உன்..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவரைப் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தித் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ட்ரம்ப் எடுத்த முயற்சிகளுக்கு வடகொரியா தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வடகொரிய அலுவலகம் வழியாக ட்ரம்ப் எழுதிய கடிதத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஆனால், அந்தக் கடிதத்தைப் பிரித்துக்கூடப் பார்க்காத வடகொரியத் தூதர், பின்னர் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தின்போது அமெரிக்கப் பிரதிநிதி முன்னிலையிலேயே அதனைத் திருப்பி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
கடந்த காலப் பேச்சுவார்த்தைகளில் ஐ.நா. தடைகளை நீக்கக் கோரிய கிம் ஜாங் உன்னின் கோரிக்கை ஏற்கப்படாததால் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. சமீபத்திய ஆசியப் பயணத்தின்போதும் ட்ரம்ப் சந்திக்க முயன்ற நிலையில், வடகொரியா விதித்த நிபந்தனைகளை அமெரிக்காவால் ஏற்க முடியாததால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
