“ஆறே மாதத்தில் எல்லாமே நாசம்… பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகிறார்கள்..” தவெக ஆட்சியை விளாசிய மு.க.ஸ்டாலின்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆறே மாதத்தில் எல்லாமே நாசம்… பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகிறார்கள்..” தவெக ஆட்சியை விளாசிய மு.க.ஸ்டாலின்..!!

Published

on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிடர் கழகத்தின் ‘குடியரசு’ இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையாற்றி பேசியதாவது:

தவெக ஆட்சியில் பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகிறார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தவெக நிர்வாகிகளே தொல்லை தருகிறார்கள். தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனக்கு இருக்கிற வருத்தம் எல்லாம், இத்தனை ஆண்டு காலம் நாம் பாடுபட்டு உருவாக்கிய இவ்வளவு வளர்ச்சியும் ஆறே மாதத்தில் பின்னோக்கி சென்றுகொண்டிருப்பதுதான்.

Advertisement

இதில் கொடுமை என்னவென்றால், ஆளுங்கட்சியும் பெரியாரை கொள்கை தலைவர் என்று கூறுவதுதான். இந்த ஆட்சிக்கே ஜோசியர்தான் கொள்கை தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். ஒரு விஷயத்தில் கூட இந்த ஆட்சியாளர்களால் உறுதியாக இருக்க முடியவில்லை. அறிவிக்கிறார்கள், ரத்து செய்கிறார்கள். எல்லாவற்றிலும் யு-டர்ன்தான். வெளிப்படைத்தன்மை இல்லை. இவர்களே ஒரு செய்தியை கசிய விடுகிறார்கள், எதிர்ப்பு கிளம்பினால், உண்மை இல்லை என்று மறுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in