LATEST NEWS
“நாங்கள் கவிழ்க்க வேண்டாம்.. தவெக ஆட்சி தானாகவே கவிழும்…” ஒற்றை வரியில் EPS கொடுத்த பளார் பதில்..!!
தவெக ஆட்சியை கவிழ்க்க அதிமுக முயற்சிப்பதாக தவெகவினர் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு EPS தெளிவான விளக்கம் அளித்துள்ளார். தங்களிடம் வெறும் 41 MLA-க்கள் மட்டுமே உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு தங்களால் எப்படி தவெக ஆட்சியை கவிழ்க்க முடியும் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக தவெகவினர் கூறி வருவதை மறுத்துப் பேசிய EPS, அதற்கு மாறாக விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தவெக ஆட்சி தானாகவே கவிழும் என்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், VS பாபு என்பவரின் உடலை சுமந்த முதலமைச்சர் விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு நேரில் சென்று ஏன் ஆறுதல் கூறவில்லை என்றும் EPS தமது உரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
