LATEST NEWS
அடப்பாவமே.. இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி வாங்கிய கிரீம்.. கடைசியில் சிறுநீரகப் பாதிப்பால் தவிக்கும் 17 வயது சிறுமி..! பகீர் கிளப்பும் தகவல்..!!
கேரளாவில் சமூக வலைதள விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் வாங்கப்பட்ட முகப்பொலிவு கிரீமைப் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு, சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முகப்பொலிவு கிரீம் பயன்படுத்திய சிறுமிக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இந்தச் சம்பவம், ஆன்லைன் அழகு சாதனப் பொருட்களின் பாதுகாப்பற்ற பயன்பாடு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் நிறமி மாற்றங்களை நீக்கும் எனக் கூறி இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் சிலர் செய்த விளம்பரத்தைப் பார்த்தே அந்தச் சிறுமி இந்தக் கிரீமை ஆர்டர் செய்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்புகொண்டு அவர் அந்தக் கிரீமை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் விற்கப்படும் இத்தகைய கிரீம்கள், உரிய மருத்துவப் பரிசோதனை அல்லது தர உறுதிப்பாடு இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளதால், சருமப் பராமரிப்புப் பொருட்களை வாங்கும்போது கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்தச் செய்தி சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினர் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.
