அம்மா உணவகத்தை மிஞ்சும் தளபதியின் ‘விலையில்லா-விருந்தகம்’ “விஜய் வெறியர்களின் நெகிழ்வான”… சம்பவம்..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மா உணவகத்தை மிஞ்சும் தளபதியின் ‘விலையில்லா-விருந்தகம்’ “விஜய் வெறியர்களின் நெகிழ்வான”… சம்பவம்..?

Published

on

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் என்றால் அது மிகை அல்ல. இவர் தற்போது மாஸ்டர் படத்தில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்காக ‘விலையில்லா விருந்தகம்’ மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் ‘விலையில்லா விருந்தகம்’ சமீபத்தில் திறக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் ஆனந்த் கலந்து கொண்டார். இந்த விருந்தகம் ஞாயிற்று கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை 109 பேருக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி அனைவரும் மாஸ்க் அணிந்து உணவு பரிமாறினர். இது குறித்து வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‘ஏழை மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என விஜய் அண்ணா அவர்கள் கூறியுள்ளார். அதனை கருத்தில் கொண்டு மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவராக தினமும் உணவுக்கான செலவை ஏற்றுக் கொள்கிறோம்’ என்றார்.

Advertisement

இட்லி, பொங்கல் என தொடர்ந்து 321 நாட்களுக்கு இலவசமாக காலை உணவுகள் வழங்க வேலூர் மக்கள் இயக்க நிர்வாகிகள் திட்டம் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியானது தளபதி வெறியர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து பொது மக்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளது.
இந்த சமூக சேவையான விஷியத்தை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in