CINEMA
மஞ்சள் நிற புடவையில் மஜாவாக இருக்கும் ரேஷ்மா
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதில் புஷ்பா கேரக்டரில் அவர் நடித்தது ரசிக்கும் வகையில் இருந்தது. அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து பெரிய திரையில் ஒரு ரவுண்டு வந்து சினிமா ரசிகர்களை கவர்வர் என எதிர்பார்த்திருக்கையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்தார். அதிலும் அவரது கேரக்டர் பெரிதாக ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை.
இதையடுத்து சின்னத்திரை பக்கம் சென்றவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. பாக்கியலட்சுமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து குடும்ப பெண்களின் மனங்களில் இடம்பிடித்தார். இருந்தாலும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியான படங்களை பகிர்ந்து இளம் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது மஞ்சள் நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மஜாவாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள்.