CINEMA
தாயார் மரணம்.. கலங்கி நிற்கும் நடிகை சீதா
பாண்டியராஜன் இயக்கி நடித்த ‘ஆண் பாவம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சீதா. 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் பார்த்திபனுடன் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இந்த ஜோடி 1990ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2001ல் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
பின்னர் 2010ல் சதீஷ் என்பவரை திருமணம் செய்த சீதா 2016ல் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் தனது தாயார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது தாயார் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.