CINEMA
“அவர் ஒரு காம கொடூரன்..! ரகசிய கேமரா வைத்து மிரட்டினார்.. பகீர் கிளப்பிய பிரபல பாடகி ஸ்வாகதா..!”
தமிழ் சினிமாவின் பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், முன்னனி இசையமைப்பாளர் ஒருவர் மீது சுமத்தியுள்ள பாலியல் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் புகழ் மாயாவின் சகோதரியான இவர், அந்த இசையமைப்பாளர் தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகவும், அதை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தால் தான் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து, தற்போது ரிஷிகேஷில் வசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
அந்த இசையமைப்பாளர் ஸ்வாகதாவிடம் இருந்து பெரிய தொகையைக் கடனாகப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், சம்பள பாக்கி வைத்திருந்ததாகவும் ஸ்வாகதா குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பணத்தை வைத்து அவர் ஆடம்பர சொத்துக்களை வாங்கியதோடு, கடனைத் திருப்பிக் கேட்டபோது ஸ்வாகதா மீது பொய்யான திருட்டுப் புகார்களைக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த இசையமைப்பாளரின் மனைவி இந்த செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும், அதே நபரால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் கருக்கலைப்பு செய்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தான் ஒரு “Sexual Abuse Victim” எனக் கூறியுள்ள ஸ்வாகதா, அந்த இசையமைப்பாளரின் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இருப்பினும், ஜி.வி. பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியோர் மிகவும் நாகரீகமானவர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம், அவர்கள் இந்தப் பட்டியலில் இல்லை என்பதை மறைமுகமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தனது சகோதரி மாயாவின் உதவியுடன் அந்தச் சூழலில் இருந்து தப்பித்ததாகக் கூறும் இவர், அந்த இசையமைப்பாளர் தனது தவறுக்காகப் பின்னர் காலில் விழுந்து கெஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார்.
