ஐயோ பாவம்..! அவருக்கு விரல்கள் இல்லையா?காமெடி நடிகருக்கு வந்த பரிதாபம் நிலை… உதவி புரிந்துவரும் நல்ல உள்ளங்கள்..நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்…!! – cinefeeds
Connect with us

CINEMA

ஐயோ பாவம்..! அவருக்கு விரல்கள் இல்லையா?காமெடி நடிகருக்கு வந்த பரிதாபம் நிலை… உதவி புரிந்துவரும் நல்ல உள்ளங்கள்..நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்…!!

Published

on

‘தமிழ் திரையுலகில் வடிவேலு, சந்தானம் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நடிகர் பாவா லட்சுமணன். ‘சொல்லாமலே’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவர், குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளித்திரையில் பலரையும் சிரிக்க வைத்த இந்த திறமையான கலைஞன், நிஜ வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயின் தீவிர பாதிப்பால் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகிறார்.

இந்த கடுமையான நோயின் பாதிப்பு காரணமாக, அண்மையில் மருத்துவர்கள் அவரது காலில் இருந்த மூன்று விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதனால் தற்போது அவர் எழுந்து நடப்பதற்கே பெரும் சிரமப்பட்டு வருகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சின்னத்திரை பிரபலம் கே.பி.ஒய் பாலா மற்றும் ‘லெஜெண்ட்’ சரவணன் ஆகியோர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கி அவரது மருத்துவச் செலவுகளுக்கு உதவியுள்ளனர்.

Advertisement

தனது மருத்துவச் செலவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு வாடகைக்கு ஒரு வீடு கிடைத்துவிட்ட தகவலை ரஜினியின் உதவியாளர் சுப்பையாவிடம் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரது மாதாந்திர செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இனிமேல் இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்றும், பாதுகாப்பாக ஆட்டோவிலேயே பயணம் செய்யுமாறும் ரஜினி அவருக்கு அறிவுறுத்தியுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக, எதிர்காலத்தில் வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் கேட்கும்படி கூறி ரஜினிகாந்த் தனக்கு பெரும் ஆறுதல் அளித்துள்ளதாக பாவா லட்சுமணன் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in