“முதலைக் கறி சாப்பிட்டிருக்கேன், நல்லா இருக்கும்..” அப்பா கமல்ஹாசன் சமைத்துக் கொடுத்த விநோத உணவுகள் குறித்து ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.. வியந்து போன ரசிகர்கள்..!!! – cinefeeds
Connect with us

CINEMA

“முதலைக் கறி சாப்பிட்டிருக்கேன், நல்லா இருக்கும்..” அப்பா கமல்ஹாசன் சமைத்துக் கொடுத்த விநோத உணவுகள் குறித்து ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.. வியந்து போன ரசிகர்கள்..!!!

Published

on

இந்தியத் திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன், தற்போது அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘சண்டியர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சினிமாவைப் போலவே உணவுப் பழக்கத்திலும் தனித்துவமான ரசனை கொண்ட கமல்ஹாசனுக்கு அசைவ உணவுகள் மீது அலாதி பிரியம் உண்டு. முன்பு கமல் கோழிக்கறி சாப்பிடுவதைப் பார்த்த நகைச்சுவை நடிகர் நாகேஷ், “இன்னுமா அந்தக் கோழி சாகவில்லை?” எனக் கிண்டலடித்ததும், சிவாஜி கணேசனே இவரது அசைவப் பிரியத்தைப் பார்த்து வியந்ததும் திரையுலகில் பிரபலமான விஷயங்களாகும்.

இந்நிலையில், தனது தந்தையின் விசித்திரமான மற்றும் வித்தியாசமான உணவுப் பழக்கங்கள் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். “அப்பா எனக்குப் பல வித்தியாசமான அசைவ உணவுகளைச் சாப்பிடக் கொடுத்திருக்கிறார்; நான் முதலைக் கறி கூடச் சாப்பிட்டிருக்கிறேன், அது நன்றாக இருக்கும். ஈசலைக்கூட அப்பா வீட்டிலேயே சமைப்பார். அதுமட்டுமின்றி பேபி ஆக்டோபஸ், கடற்குதிரை எனப் பல விநோத உணவுகளைச் சாப்பிட்டுள்ளேன்; ஒருநாள் ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தபோது உள்ளே கடற்குதிரை கிரேவியில் மிதந்து கொண்டிருந்தது” என்று ஸ்ருதிஹாசன் சிரிப்புடன் கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த வித்தியாசமான உணவு ரசனை குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in