CINEMA
“அவரை நான் அப்படிப் பார்த்ததே இல்ல…” விஜயின் One Last Dance’ ப்ரோமோவைப் பார்த்து அழுத பிரபல இயக்குநர்… சாய் பல்லவி பகிர்ந்த நெகிழ்ச்சித் தகவல்..!!
தமது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கும்போதே மக்கள் சேவைக்காக அரசியலில் களமிறங்கிய முதலமைச்சர் விஜய், நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவரது இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ படத்தின் ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ விளம்பரத்தைப் பார்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உணர்ச்சிவசப்பட்டு அழுததாக நடிகை சாய் பல்லவி அண்மைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘OM: Operation Mole’ திரைப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஜன நாயகன்’ படத்தின் ப்ரோமோ வெளியான போது படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ராஜ்குமார் பெரியசாமி, அதைப் பார்த்துவிட்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார். தான் ஒருபோதும் அவரை அப்படிப்பட்ட ஒரு நிலையில் பார்த்ததில்லை என்றும், விஜயின் மீது அவர் வைத்துள்ள பக்தி அதுவென்றும் சாய் பல்லவி வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘OM: Operation Mole’ திரைப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவியுடன் இணைந்து மம்மூட்டி, ஸ்ரீலீலா மற்றும் நசிருதீன் ஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தனக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியாக சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
