கேக்ல “All is Well”… ஆனா தவெக ஆட்சியில் “Is all Well CM..?” முதலமைச்சர் விஜய்யை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கேக்ல “All is Well”… ஆனா தவெக ஆட்சியில் “Is all Well CM..?” முதலமைச்சர் விஜய்யை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி..!!

Published

on

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு சார்பில் கேக் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ-மாணவியருக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் கேக்கினை வழங்கினார். அந்த வாழ்த்து அட்டையில் “All is well.. Confident ah irunga..” என்று குறிப்பிட்டு குழந்தைகள் தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும் வரும் செய்திகள் மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், செஞ்சி சிறுமி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கேக் கொடுக்கும் அட்டையில் ‘All is Well’ என்று எழுதி இருக்கிறார்கள்; உங்கள் ஆட்சியில் ‘Is all Well CM?’” என்று கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளுக்குப் பள்ளி, வீடு, சாலை என எங்குமே பாதுகாப்பு இல்லை என்றும், இந்த ஆட்சியில் குற்றவாளிகள் மட்டுமே ‘Confident’-ஆக இருக்க முடியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். எனவே, திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in