அப்பாவிகளா அல்லது முட்டாள்களா? 15 பேர் பணிநீக்க விவகாரம்… திடீரெனப் பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பிய முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்பாவிகளா அல்லது முட்டாள்களா? 15 பேர் பணிநீக்க விவகாரம்… திடீரெனப் பதிவிட்டுப் பரபரப்பைக் கிளப்பிய முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்..!!

Published

on

தமிழக தொழில்துறை ரகசியங்களைக் கசியவிட்டதாகக் கூறி 15 ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முடிவெடுக்கும் அதிகாரமே இல்லாத நடுத்தர நிலை ஒப்பந்தப் பணியாளர்களால் ஒரு மாநிலத்தின் முதலீட்டு முடிவுகளைத் தீர்மானிக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்களும் அவற்றின் உயர் அதிகாரிகளும் இத்தகைய பணியாளர்களை நம்பி முதலீட்டு முடிவுகளை எடுக்கும் அளவுக்கு அப்பாவிகளோ அல்லது முட்டாள்களோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்ற பணியாளர்களை ஒட்டுமொத்தமாக மாற்றுவதுதான் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும் என பி.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in