“ஸ்டாலின், மம்தாவிடம் வேலை பார்த்தவள் நான்” த.வெ.க.வில் இணைந்தது முதல் அமைச்சர் நாற்காலி வரை, 8 ஆண்டு ரகசியத்தை உடைத்த கீர்த்தனா – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலின், மம்தாவிடம் வேலை பார்த்தவள் நான்” த.வெ.க.வில் இணைந்தது முதல் அமைச்சர் நாற்காலி வரை, 8 ஆண்டு ரகசியத்தை உடைத்த கீர்த்தனா

Published

on

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழகத் தொழிற்துறை அமைச்சர் ச. கீர்த்தனா, முழுநேர அரசியலில் களம் இறங்குவதற்கு முன்பாகத் தான் பார்த்து வந்த பணி குறித்துப் பொதுவெளியில் முதன்முறையாக நெகிழ்ச்சியுடனும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்ட அவர், தனது முந்தைய அரசியல் ஆலோசகர் மற்றும் தேர்தல் வியூகப் பணி வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

அரசியல் ஆலோசகராக இருந்தபோது தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மமதா பானர்ஜி மற்றும் ந்திரபாபு நாயுடு ஆகிய மூன்று முக்கிய மாநிலத் தலைவர்களுடன் தேர்தல் வியூகக் குழுவில் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இத்தகைய மாபெரும் ஆளுமைகளுடன் பணிபுரிந்த அனுபவம்தான் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளைத் தனக்கு ஆழமாகப் புரிய வைத்ததுடன், “நாமும் இந்த அரசியலில் சாதிக்க முடியும்” என்ற பெரும் தைரியத்தையும் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அரசியலில் வெற்றிபெறப் பண பலம் மட்டுமே முக்கியம் என்று கூறப்படுவதை மறுத்த அமைச்சர் கீர்த்தனா, தான் சுமார் 8 ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் அரசியல் ஆலோசகராக உழைத்துச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த சொந்தப் பணத்தை மட்டுமே முதலீடாக வைத்து அரசியலுக்குள் வந்ததாகக் கூறியுள்ளார். வேலையை விட்டுவிட்டு எவ்விதப் பின்னணியும் இன்றிப் பொது வாழ்க்கைக்கு வந்த தன்னை, தமிழக மக்கள் கைவிடாமல் சிவகாசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர் என்றும், தான் இந்த நிலைக்கு வர முதல்வர் விஜய் தான் முக்கியக் காரணம் என்றும் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in