“நான் மொத்தமா சொல்லல…” தங்கம் தென்னரசு கேள்விக்கு அமைச்சர் கீர்த்தனா அளித்த பளிச் பதில்..! பத்திரிகை செய்தியால் சட்டமன்றத்தில் வெடித்த காரசார விவாதம்..!! “ – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் மொத்தமா சொல்லல…” தங்கம் தென்னரசு கேள்விக்கு அமைச்சர் கீர்த்தனா அளித்த பளிச் பதில்..! பத்திரிகை செய்தியால் சட்டமன்றத்தில் வெடித்த காரசார விவாதம்..!! “

Published

on

தமிழக சட்டமன்றப் பேரவையில், தவெக ஆட்சியில் தொழில்துறை பின் தங்கியுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் கீர்த்தனா, இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியான குறிப்பிட்ட அந்தச் செய்தி தவறானது என்று மறுத்தார். மேலும், சிலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவதாகக் கடுமையாகச் சாடினார்.

அமைச்சரின் பேச்சுக்கு உடனடியாகக் குறுக்கிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊடகங்களை ஒட்டுமொத்தமாகத் தவறாகச் சித்தரிக்கவோ அல்லது குறை கூறவோ கூடாது என்று சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, தான் ஊடகத் துறையை பொதுப்படையாகக் குறிப்பிடவில்லை என்றும், தவறான தகவலை வெளியிட்ட குறிப்பிட்ட ஒரு செய்தி நிறுவனத்தை மட்டுமே சுட்டிக்காட்டிப் பேசியதாகவும் விளக்கமளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in