“சார், தவறு செய்துவிட்டேன்… இனிமேல் செய்ய மாட்டேன்..!” போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு மன்றாடும் குற்றவாளி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“சார், தவறு செய்துவிட்டேன்… இனிமேல் செய்ய மாட்டேன்..!” போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு மன்றாடும் குற்றவாளி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், விடுதி அறையில் இளம்பெண் ஒருவரைச் சிறைவைத்துக் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சல்மான் என்ற நபர், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் காலில் குண்டடிபட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். மீரட் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பிணைக்கைதியாக அடைத்து வைத்த சல்மான், அவரைக் கொடூரமான முறையில் தாக்கிச் சித்திரவதை செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நேற்று மதியம் முதல் சல்மான் தலைமறைவாகிவிட்டார்.

இவரைப் பிடிக்க மீரட் காவல்துறை சார்பில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த சல்மானை மீரட் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டடிபட்டுப் பலத்த காயமடைந்த சல்மான், தற்போது காவல்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளார்.

Advertisement

விடுதி அறையில் இளம்பெண்ணைச் சிறைவைத்துக் கொடூரமாகத் தாக்கியபோது ஆக்ரோஷமாகச் செயல்பட்ட சல்மான், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நிலைகுலைந்து போனார். தற்போது, “சார், நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்; இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன்” எனக் காவல்துறையினரிடம் மன்றாடி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in