“ராத்திரி 11:30-க்கு மூட வேண்டிய இடத்தில் விடிய விடிய மது விருந்து..” அதிகாலை 5:45-க்குப் போலீசில் கதறிய இளம் பெண்… பெண்களும் உடந்தையாக இருந்த பகீர் சம்பவம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ராத்திரி 11:30-க்கு மூட வேண்டிய இடத்தில் விடிய விடிய மது விருந்து..” அதிகாலை 5:45-க்குப் போலீசில் கதறிய இளம் பெண்… பெண்களும் உடந்தையாக இருந்த பகீர் சம்பவம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

டெல்லியின் பிரீத் விஹார் பகுதியில் நள்ளிரவு விருந்துக்குப் பிறகு 22 வயது இளம்பெண் ஒருவர் தனது சக ஊழியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண்ணும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் டெல்லி கர்கர்டூமாவில் உள்ள வணிக வளாக உணவகம் ஒன்றில் ஒன்றாகப் பணியாற்றி வந்தவர்கள் ஆவர். கடந்த திங்கட்கிழமை இரவு, அந்த இளம்பெண் உட்பட மொத்தம் எட்டு பேர் கொண்ட குழு பிரீத் விஹாரில் உள்ள மற்றொரு உணவகத்தில் விருந்துக்காகக் கூடியுள்ளது. வழக்கமாக இரவு 11.30 மணிக்கு மூடப்படும் அந்த உணவகத்தை, அங்கிருந்த ஊழியர் ஒருவர் தன்னிடமிருந்த சாவியைப் பயன்படுத்தி நள்ளிரவில் மீண்டும் திறந்துள்ளார்;

அங்கு அதிகாலை 3.30 மணி வரை அனைவரும் மது அருந்தியுள்ளனர். அதிகாலை 3.30 மணியளவில் உணவகத்திலிருந்து அனைவரும் வெளியேறிய நிலையில், உடன் வந்த இரண்டு ஆண்கள் தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். மேலும், இந்தக் கொடூரச் செயலுக்கு அங்கிருந்த மற்ற சக ஊழியர்களும் உடந்தையாக இருந்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு ஆண் நண்பர் மற்றும் இரண்டு பெண்களுடன் வாகனத்தில் சென்ற அந்தப் பெண், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நடந்த சம்பவத்தை விவரித்துப் புகார் அளித்தார்.

Advertisement

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததோடு, நீதிபதி முன்னிலையிலும் வாக்குமூலம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற மூன்று குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in