அடக் கொடுமையே.. ஆயுள் தண்டனை அறிவித்த அடுத்த நொடி… குற்றவாளி செய்த பகீர் காரியம்.. கோர்ட் கட்டிடத்தில் நடந்த திகில் நிமிடங்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக் கொடுமையே.. ஆயுள் தண்டனை அறிவித்த அடுத்த நொடி… குற்றவாளி செய்த பகீர் காரியம்.. கோர்ட் கட்டிடத்தில் நடந்த திகில் நிமிடங்கள்..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள பேலாப்பூர் நீதிமன்றத்தில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி நீதிமன்றக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 30 முதல் 35 வயதுக்குட்பட்ட நாகேஷ் பாபு லாட் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நெருல் காவல்துறையினரால் நாகேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு பேலாப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை அன்று நீதிபதி பிரசன்னா சண்ட்குடே தலைமையிலான நீதிமன்றம் நாகேஷை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

Advertisement

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து நாகேஷ் திடீரெனக் கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்தச் சம்பவம் அங்குப் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in