அய்யயோ.. திடீரென உடலில் தீ வைத்துக்கொண்ட இளம்பெண்.. நொடியில் ஓடிவந்து பொதுமக்கள் செய்த சாதுரிய செயலால் நடந்த அதிசயம்.. மருத்துவமனை வளாகத்தில் நடந்த பரபரப்பு நிமிடங்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யயோ.. திடீரென உடலில் தீ வைத்துக்கொண்ட இளம்பெண்.. நொடியில் ஓடிவந்து பொதுமக்கள் செய்த சாதுரிய செயலால் நடந்த அதிசயம்.. மருத்துவமனை வளாகத்தில் நடந்த பரபரப்பு நிமிடங்கள்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத் தலைமையகத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை நுழைவாயில் முன்பு, இளம்பெண் ஒருவர் திடீரெனத் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்த நிலையில் வலியால் துடித்த அந்தப் பெண், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கியுள்ளார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாகச் செயல்பட்ட அங்கிருந்த பொதுமக்கள், கால்வாய்க்குள் இறங்கித் தீயை அணைத்து அந்த இளம்பெண்ணைப் பத்திரமாக மீட்டுள்ளனர். பின்னர், அவர் உடனடியாக அதே மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

பாதிக்கப்பட்ட இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனை நுழைவாயில் முன்பே நடந்த இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், அப்பெண்ணின் பின்னணி மற்றும் சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in