LATEST NEWS
“நாங்கள் இருக்கிறோம் மகளே..!” உயிரிழந்த நண்பனின் மகளின் திருமணத்திற்கு வந்த ராணுவ வீரர்கள்… மணமகளுக்கு அவர்கள் செய்த நெகிழ்ச்சிச் செயல்.. இணையத்தை உருக வைக்கும் வைரல் வீடியோ..!!
தந்தையை இழந்த சக ராணுவ வீரரின் மகளுக்கு, ராணுவ வீரர்களே முன்னின்று தந்தையின் இடத்திலிருந்து திருமணத்தை நடத்தி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உயிரிழந்த சக வீரரின் குடும்பத்திற்குத் துணை நிற்கும் வகையில், ராணுவ வீரர்கள் தங்களது சீருடையில் திருமண மண்டபத்திற்கு வருகை தந்து, மணமகளுக்குத் தேவையான அனைத்துச் சடங்குகளையும் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து சிறப்பாகச் செய்து முடித்தனர்.
திருமணச் செலவுகளுக்காக ராணுவ வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 1.61 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கியுள்ளனர். தந்தை இல்லாத குறை மணமகளுக்குத் துளியும் தெரியாத வகையில், திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் ராணுவ வீரர்கள் உடனிருந்து வாழ்த்தியது அங்கிருந்த உறவினர்களையும், விருந்தினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
திருமண சடங்குகள் முடிந்து மணமகளைப் புகுந்த வீட்டிற்கு வழியனுப்பி வைக்கும் தருணத்தில் தங்களது சொந்த மகளை வழியனுப்புவது போல ராணுவ வீரர்கள் கண்கலங்கிய காட்சி அனைவரது இதயத்தையும் உருக்கியது. நாட்டின் எல்லையைக் காப்பது மட்டுமல்லாமல், சக வீரரின் குடும்பத்தையும் தங்கள் குடும்பமாகக் கருதி ராணுவத்தினர் காட்டிய இந்த அன்பும் மனிதநேயமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
