“‘நான்தான் தாய்மாமன், நான்தான் அண்ணன்” விஜய்யின் போலி பிம்பம் உடைந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“‘நான்தான் தாய்மாமன், நான்தான் அண்ணன்” விஜய்யின் போலி பிம்பம் உடைந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தனை நாட்களாகக் கட்டமைக்க முயன்ற போலி பிம்பங்கள், அவருடைய சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்தான் தாய்மாமன், நான்தான் அண்ணன், பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் கேரண்டி (Guarantee)” என்றெல்லாம் விஜய் வசனம் பேசி வந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ எனப் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அவர் உருவாக்க நினைத்த பிம்பங்கள் அனைத்தும் போலியானவை என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் தவெக எம்எல்ஏ மீது எழுந்துள்ள புகாரை முன்வைத்து, விஜய் உருவாக்கியிருந்த பிம்பம் அவரது கட்சி எம்எல்ஏ-வினாலேயே உடைத்தெறியப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in