CRIME
“அடச்சீ நீயெல்லாம் மகளா..?” காதலுக்குத் தடையாக இருந்த பெற்ற தாய்.. திருவிழா இரவில் காதலனுடன் சேர்ந்து மகள் செய்த கொடூரச் செயல்.. குளிர் நடுங்கவைக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், தனது காதலுக்குத் தடையாக இருந்த தாயை மகளே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ராஜ்மணியின் மகள் ஷைல்ஜா மற்றும் அவரது காதலன் திலீப் குமார் சரோஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நவம்பர் 20-ஆம் தேதி இரவு, ராஜ்மணியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் பரவாரியில் நடைபெற்ற தசரா திருவிழாவைப் பார்க்கச் சென்றிருந்தபோது இந்தப் பயங்கரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவிழா முடிந்து குடும்பத்தினர் வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டிற்குள் ராஜ்மணி தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துத் தீவிர விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகள், மின்னணுக் கண்காணிப்பு மற்றும் அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், திலீப் மற்றும் ஷைல்ஜா ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தானும் ஷைல்ஜாவும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஆனால் தங்களின் காதலுக்கு ராஜ்மணி கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டதாகவும் திலீப் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக, குடும்பத்தினர் அனைவரும் திருவிழாவிற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இருவரும் சேர்ந்து ராஜ்மணியைக் கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பெற்ற தாயையே காதலுக்காக மகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
