CRIME
“ஐயோ என் தம்பிய காணோம்” 14 வயசு சிறுவனை காட்டுக்கு அழைத்துச்சென்று… அண்ணனனும், அண்ணியும் சேர்ந்து செய்த கொடூரம்… 12 மணி நேரத்தில் நாடகத்தை உடைத்த போலீஸ்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், நிலத்திற்காக 14 வயது சிறுவன் சொந்த அண்ணன் மற்றும் அண்ணியாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசூல்பூர் மதியாமாய் கிராமத்தைச் சேர்ந்த சோட்டு (14) என்பவரின் சடலம், கிராமத்திற்கு அருகிலுள்ள குளக்கரை புதரில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள்ளேயே குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில், சோட்டுவின் பெயரில் இருந்த நிலத்தை அபகரிக்கும் ஆசையில் அவனது அண்ணன் ராஜேஷ்வர், அண்ணி நிஷா தேவி மற்றும் அண்ணியின் தந்தை கமலேஷ் ஆகியோர் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது தெரியவந்துள்ளது. நவம்பர் 21 இரவு, இயற்கை உபாதை கழிப்பதற்காக அண்ணியுடன் வயல்வெளிப் பகுதிக்குச் சென்ற சோட்டுவை, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த ராஜேஷ்வர் மற்றும் கமலேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து உடலைப் புதரில் வீசியுள்ளனர்.
கொலைக்குப் பிறகு ராஜேஷ்வர் மற்றும் கமலேஷ் ஆகியோர் ஃபதேபூருக்குத் தப்பிச் சென்ற நிலையில், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க நிஷா தேவி வீட்டிற்கு வந்து சோட்டுவைக் காணவில்லை என நாடகமாடியுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
