“3-வது திருமணம் செய்தும் அடங்காத ஆசை..!” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடூரமாக ஸ்கெட்ச் போட்ட 25 வயது மனைவி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“3-வது திருமணம் செய்தும் அடங்காத ஆசை..!” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடூரமாக ஸ்கெட்ச் போட்ட 25 வயது மனைவி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில், 25 வயது இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும், ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தீபக்கிற்கு இது இரண்டாவது திருமணம் என்பதோடு, அவருக்கு முதல் திருமணம் மூலம் மூன்று குழந்தைகள் உள்ளனர்; அதேபோல் ஜோதிக்கு இது மூன்றாவது திருமணம் என்பதோடு, முந்தைய கணவர் மூலம் ஆறு வயது மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில், ஜோதிக்கும் மனோஜ் என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் தீபக்கைத் தீர்த்துக்கட்ட ஜோதியும் மனோஜும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, முதலில் இருவரும் சேர்ந்து தீபக்கின் தலையில் செங்கல்லால் பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து தீபக் கீழே சரிந்ததும், அவர் சத்தமிடாமல் இருக்க ஜோதி அவரது வாயில் துணியைத் திணித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காதலன் மனோஜ் தனது காலால் தீபக்கின் கழுத்தை நெரித்து மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

Advertisement

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி தீபக்கின் உடல் மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, உயிரிழந்த தீபக்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மனைவி ஜோதியை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்; மேலும், தலைமறைவாக உள்ள அவரது காதலன் மனோஜைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in