உச்சகட்ட கொடூரம்… நபரின் ஆசனவாய் வழியாக 4 அடி குழாயை நுழைத்த கும்பல்… ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்து போன மருத்துவர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட கொடூரம்… நபரின் ஆசனவாய் வழியாக 4 அடி குழாயை நுழைத்த கும்பல்… ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்து போன மருத்துவர்கள்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், கழிவறை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவரின் உடலுக்குள் 4 அடி நீளமுள்ள குழாயை நுழைத்துக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை தொடர்பாக ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த நபர்கள் பாதிக்கப்பட்டவரின் ஆசனவாய் வழியாக 4 அடி நீளமுள்ள குழாயை உள்ளே செலுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலால் அவரது பெருங்குடல் கடுமையாகச் சேதமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நபர், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஜோத்பூரில் உள்ள எம்.டி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றுக்குள் 4 அடி குழாய் சிக்கியிருப்பதையும், குடல் பகுதி மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 13-ஆம் தேதி மருத்துவர்கள் குழுவினர் மிகவும் சவாலான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அவரது வயிற்றிலிருந்த 4 அடி குழாயை வெற்றிகரமாக அகற்றி உயிரைக் காப்பாற்றினர்.

Advertisement

மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நபர் உயிர் பிழைத்த போதிலும், இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்தத் தகராறு மற்றும் தாக்குதல் தொடர்பாக இதுவரை காவல்துறையினருக்கு எவ்விதப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், மருத்துவமனை நிர்வாகத்தின் தகவல் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in