CRIME
“கடன் சுமை ஒரு பக்கம்… கருகிய பயிர்கள் மறுபக்கம்..” விவசாயி செய்த பகீர் காரியம்.. கதறி அழும் 3 பெண் குழந்தைகள்.. கண்கலங்க வைக்கும் சோகம்..!!
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்னசங்கரம்பேட்டையில், கடன் சுமை மற்றும் விளைச்சல் பொய்த்துப் போனதால் மனமுடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி நாராயணா என்பவர், தனது குடும்பச் செலவுகளுக்காகவும் விவசாயப் பணிகளுக்காகவும் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தார். தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நெல் சாகுபடி செய்திருந்தார்.
அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், போதிய நீரின்றி நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாகக் கருகிப் போயின. இதனால் கையில் இருந்த முதலீடும் போய், வாங்கிய 2 லட்சம் ரூபாய் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று தெரியாமல் நாராயணா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
உயிரிழந்த விவசாயி நாராயணாவுக்கு யசோதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த நாராயணாவின் திடீர் மரணத்தால், வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்றும், மூன்று பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி வழிநடத்துவது என்றும் தெரியாமல் அவரது மனைவியும் குடும்பத்தினரும் கதறி அழுவது காண்போரைக் கண்கலங்க வைத்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
