அன்னைக்கு அப்படி பேசிட்டு இன்னைக்கு ஆதரவா..? இடைத்தேர்தலுக்காக விஜய்யை காக்கா பிடிக்கும் வைகோ… பழைய வீடியோக்களைத் தூசி தட்டி கிளப்பும் அரசியல் விமர்சகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அன்னைக்கு அப்படி பேசிட்டு இன்னைக்கு ஆதரவா..? இடைத்தேர்தலுக்காக விஜய்யை காக்கா பிடிக்கும் வைகோ… பழைய வீடியோக்களைத் தூசி தட்டி கிளப்பும் அரசியல் விமர்சகர்கள்…!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தை அதன் தொடக்க காலத்தில் இருந்தே தாங்கள் ஆதரித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்காகத்தான் ஆளும் தவெகவை ஆதரிக்கிறீர்களா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தாங்கள் ஆரம்பம் முதலே அக்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக வைகோ இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், வைகோவின் இந்தப் புதிய நிலைப்பாட்டிற்கு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில், வைகோவும் அவரது மகன் துரை வைகோவும் தவெகவையும் அதன் தலைமையையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்கான வீடியோ மற்றும் செய்தித் தரவுகள் உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

குறிப்பாக, கடந்த காலத்தில் நிகழ்ந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது, அந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்குச் சிறிதும் குற்ற உணர்வே இல்லை என வைகோ மிகக் கடுமையாகச் சாடியிருந்தார். இவ்வாறு கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, தற்போது இடைத்தேர்தல் நெருங்கும் சூழலில் தொடக்கத்திலிருந்தே தவெகவை ஆதரிப்பதாக வைகோ கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in