LATEST NEWS
வெறும் MLA-வா இல்ல மீண்டும் CM-ஆ..? கொளத்தூர் இடைதேர்தலில் திமுகவுக்குள் நீடிக்கும் இழுபறி.. ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன..??
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவது குறித்துக் கட்சிக்குள் இழுபறி நீடித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், ‘அப்பாவை காணும்’ எனக் கிண்டலாகப் பேசியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலின் மீண்டும் சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என திமுகவில் ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், வெறும் எம்.எல்.ஏ-வாகச் செல்வதை விட, மீண்டும் முதலமைச்சராகத்தான் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என மற்றொரு தரப்பினர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இருவேறு கருத்துக்கள் குறித்தும் ஸ்டாலின் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
