“டேய் இங்க என்னடா பண்ணுற..?” வீட்டு கிச்சனுக்குள் நுழைந்த சிறுத்தைக்கு ஷாக் கொடுத்த குடும்பத்தினர்… கடைசியில் நடந்த செம டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டேய் இங்க என்னடா பண்ணுற..?” வீட்டு கிச்சனுக்குள் நுழைந்த சிறுத்தைக்கு ஷாக் கொடுத்த குடும்பத்தினர்… கடைசியில் நடந்த செம டுவிஸ்ட்..!!

Published

on

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த வீட்டின் சமையலறைக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த அந்தச் சிறுத்தை, எதிர்பாராதவிதமாக அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

சமையலறைக்குள் சிறுத்தை புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள், சற்றும் பதற்றமடையாமல் துரிதமாகச் செயல்பட்டு சமையலறைக் கதவை வெளிப்புறமாகப் பூட்டி வைத்தனர். இதன் மூலம் வீட்டில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தினரும் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாகத் தப்பினர்.

Advertisement

தொடர்ந்து இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் மயக்கமடைந்த சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்டுக் கூண்டில் அடைத்த வனத்துறையினர், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in