அம்மாடியோ.. வீட்டிற்குள் புகுந்த எமன்.. வளர்ப்பு நாயைக் கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… சாமர்த்தியமாக குடும்பத்தினர் செய்த காரியம்.. திக் திக் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அம்மாடியோ.. வீட்டிற்குள் புகுந்த எமன்.. வளர்ப்பு நாயைக் கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தை… சாமர்த்தியமாக குடும்பத்தினர் செய்த காரியம்.. திக் திக் வீடியோ..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள சுமதி மார்க்கெட் பகுதியில், குடியிருப்பு வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த அந்தச் சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை ஆக்ரோஷமாகத் தாக்கியதால், வீட்டிலிருந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தனர். பின்னர், அந்தச் சிறுத்தை தாக்கிய நாயைக் கவ்விப் பிடித்து வீட்டின் குளியலறைக்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சிறுத்தை குளியலறைக்குள் சென்றதைக் கவனித்த குடும்பத்தினர், சற்றும் தாமதிக்காமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு குளியலறையின் கதவை வெளியிலிருந்து பூட்டினர். இதனால் சிறுத்தை வீட்டிற்குள் மற்ற அறைகளுக்குச் செல்ல முடியாமல் குளியலறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டது. உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மீட்புக் குழுவினர் குளியலறைக்குள் அடைபட்டிருந்த சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in