அதிகாலையிலேயே அதிர்ச்சி.. 35 பயணிகளுடன் பாலத்திற்கு கீழே பாய்ந்த பேருந்து.. 6 பேருக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அதிகாலையிலேயே அதிர்ச்சி.. 35 பயணிகளுடன் பாலத்திற்கு கீழே பாய்ந்த பேருந்து.. 6 பேருக்கு நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி கார்வால் மாவட்டத்தில், சுமார் 30 முதல் 35 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திற்குக் கீழே 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். ஹரித்வாரிலிருந்து சமோலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, அதிகாலை 4:30 மணியளவில் குலார் பஜார் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து குலார் பாலத்திற்குக் கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் காயமடைந்த சுமார் 20 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் நித்திகா கண்டேல்வால் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதா சௌபே ஆகியோர் மீட்புப் பணிகளை நேரில் மேற்பார்வையிட்டனர். இச்சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in