LATEST NEWS
“அடுத்தவன் பொண்டாட்டி கேக்குதோ உனக்கு” வேறு ஒருவரின் மனைவியைக் காதலித்து அழைத்துச் சென்ற இளைஞருக்குத் தர்ம அடி… பல்லாவரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!
சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த டேவிட் என்பவருக்கும், பல்லாவரத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த தீபாவளியன்று இருவரும் தங்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறித் தலைமறைவாகினர்.
மனைவியைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பவானியின் கணவர், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த இருவரையும் கண்டுபிடித்து விசாரணைக்காகப் பல்லாவரத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்குத் திரண்டு வந்த கும்பல் ஒன்று, டேவிட்டைச் சரமாரியாகத் தாக்கியதில் அவருக்கும் உடனிருந்த பவானிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்துப் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
